பதிவு செய்த நாள்
14
ஜன
2022
02:01
பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார். அவர் கூறியதாவது: மனித குலம் மேன்மை அடைய, மனிதர்கள் தானும் வளமாக வாழ்ந்து, பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களாக விளங்க உதவுபவை வேதங்கள். மனித நாகரீகம் என்பது வளர வேதகருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும். வேத கருத்துக்களை சொல்லி தர நல்ல குருமார்கள் தேவை. அவற்றை கோவில்கள் மூலம் முன்னோர்களும், மன்னர்களும் பிரசாரம் செய்தனர். இல்லறத்தில் இருப்பவர்கள் தர்மத்தை பின்பற்ற வேண்டும். சன்னியாசிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.பக்தி உணர்வுஇந்திய வாழ்க்கை முறை என்பது பக்தியுடன் சேர்ந்தது. மாட மாளிகைகளில் வாழ்ந்தாலும் பக்தி உணர்வுடன் வாழ வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தியாக உணர்வை வளர்த்து கொள்ளவேண்டும். இப்படி பல தர்மங்களை சொல்லி கொடுப்பவை இந்திய வாழ்க்கை கலாசார முறை.
இந்த நன்னாளில் நாம் சூரிய விழாவான பொங்கல் கொண்டாடி வருகிறோம். நாம் நீண்ட ஆயுளுடனும், நோய் நொடி இன்றியும், விவாசாயம் செழிக்கவும் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுகிறோம். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இன்று சூரியனையும், மறுநாள் மாட்டுப்பொங்கலன்று பசு, கன்று, காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, தெய்வமாகவே பாவித்து வணங்க வேண்டும். இந்த பொல்கலை வீட்லும், கோயில்களிலும் செய்து, சிறப்பாக கொண்டாடி இறைவனை பிரார்த்தனை செய்வோம்.