அன்னூர்: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், பஜனை நடந்தது. பிரசித்தி பெற்ற, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலையில், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலித்தார். நேற்றுமுன்தினம் இரவு 8:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பஜனை துவங்கியது. பஜனையில் பக்தர்களின் பிருந்தாவன நடனமும் நடந்தது. நள்ளிரவு வரை நடந்த பஜனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து வீடுகளிலேயே கண்விழித்து பெருமாளை சேவித்த பக்தர்களுக்கு நேற்று காலை தனியார் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.