பதிவு செய்த நாள்
16
ஜன
2022
06:01
மைசூரு ; நஞ்சன்கூடு சுத்துார் மடத்தில், வரும் 28 முதல் பிப்ரவரி 2 வரை நடக்கவிருந்த சிவராத்திரிஸ்வர சிவயோகி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.மடத்தின் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவுவதால், மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
எனவே மக்களின் நன்மையை கருதி, வரும் 28 முதல் பிப்ரவரி 2 வரை நடக்கவிருந்த சிவராத்திரிஸ்வர சிவயோகி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத உற்சவம், தெப்ப உற்சவம், கூட்டு திருமணம், பொருட்காட்சி, விவசாய மேளா, குஸ்தி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கடைகள் என எதுவும் கிடையாது.பொது மக்கள், பக்தர்களுக்கு மடத்தில் நுழைய அனுமதியில்லை. சம்பிரதாய முறைப்படி, வரும் 29ல் மாலைூ 30ல் நடக்கும் வழிபாடுகளை ஆன்லைனில் பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.