திருப்பதி:திருமலை ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசி அன்று 46 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சொர்க்க வாசல் வழியாக செல்ல பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.எனவே கொரோனா காலத்திலும் 46 ஆயிரம் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கைகள் வாயிலாக 4.06 கோடி ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.