பசுவின் குளம்படி பட்ட புழுதியை கோதுாளி என்பர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும். அது நம் உடம்பில் பட நேர்ந்தால் பாவம் நீங்கும். புனித நதியில் நீராடிய புண்ணியம் சேரும் என்கிறது சாஸ்திரம். கிருஷ்ணரின் மேனி எங்கும் கோதுாளி பட்டதால் அவர் அழகுக்கு அழகு சேர்ந்ததாக பாகவதம் வர்ணிக்கிறது. கோவிந்த அஷ்டகம் என்னும் ஸ்தோத்திரத்தில், கிருஷ்ணர் கோதுாளியில் திளைத்தாடியதை ஆதிசங்கரர் போற்றியுள்ளார். மேய்ச்சல் முடிந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தை கோதுாளி லக்னம் என்று சொல்வர். அதிகாலை, மாலை நேரமான இந்த சுபவேளையில் தொடங்கும் செயல்கள் கிருஷ்ணர் அருளால் இனிதே நிறைவேறும்.