சோமனூர்: ஊஞ்சப்பாளையம் சில சக்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்த ஊஞ்சப்பாளையம் ஸ்ரீ சிவ சக்தி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, 11 ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து மேள, தாளங்களுடன் தீர்த்த கலசங்களை பெண்கள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து, சிறப்பு ஹோமம் முடிந்து, விநாயகருக்கு, பால், தயிர், இளநீர், தேன், மற்றும் தீர்த்த அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. செந்தில் பர்னிச்சர் சார்பில், பகவத் கீதை புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.