காலையில் எழுந்தவுடன் நீராடி விட்டு கீழ்வானில் உதயமாகும் சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்று. இதனை, ‘சூரிய நமஸ்காரம்’ என சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாடே முதல் வழிபாடு. காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணமும் யுகமாக கழிந்தது. பொழுது புலர்ந்த போது கீழ்வானில் சூரியன் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் நன்றியுடன் வழிபட்டான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.