வெற்றியை விரும்பாதவர் யார்... சாதாரண நிலையிலே என்றும் வாழ நினைப்பவர் யார்.. எவருமில்லை. எல்லோரும் வெற்றி பெறவே விரும்புகிறோம். ஆனால் விரும்பினால் போதுமா.. விருப்பம் மட்டும் வெற்றியைத் தராது. வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையும் வேண்டும். நம்பிக்கையானது மலையையே அசைக்க வல்லது. தோல்வியுற்ற பலரிடம் பேசினால் உண்மை ஒன்று தெரியவரும். ‘ஆரம்பிக்கும்போதே வெற்றி பெற மாட்டேன் என்கிற பயம் எனக்கு இருந்தது’ என்பார்கள். சந்தேகத்துடன் தொடங்கும் எந்தவொரு செயலும் தோல்வியையே தரும். முன்னேறுபவர்களைக் கவனியுங்கள். தங்கள் திறமையை அவர்கள் உயர்வாக நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். அதனால் அவர்கள் அடையும் சிறப்புகளும் அதிகம். தன்னால் எந்த ஒரு பெரிய செயலையும் செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதே தீவிரத்துடன் செயலாற்றி வெற்றியும் பெறுகிறார்கள். உங்களை நம்புங்கள். அப்போதுதான் வெற்றிக்கனியை ருசிக்க முடியும்.