Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலின் தூண்களில் ... வடபழநி ஆண்டவர் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக தீர்த்த குடம் வலம் வடபழநி ஆண்டவர் கும்பாபிஷேக யாகசாலை ...
முதல் பக்கம் » வடபழனி கும்பாபிஷேகம் » செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோயிலில் எழுந்துள்ள கம்பீரமான யாகசாலையும், கவின்மிகு உற்சவர் சன்னதியும்!
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோயிலில் எழுந்துள்ள கம்பீரமான யாகசாலையும், கவின்மிகு உற்சவர் சன்னதியும்!

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
02:01

சென்னை : சென்னை வடபழநியில் உள்ள வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற 23ம் தேதி தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நடைபெற இருக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் பல புதிய விஷயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.அவற்றில் யாகசாலையும்,உற்சவர் சன்னதியும் முக்கியமானதாகும். இந்து மதத்தில் யாகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. யாகம் என்பது ஒரு சிறப்பு மத செயல்முறையாகும், யாகம் நடத்துவதன் மூலம் யாகம் நடத்துபவர்கள்  மன மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஆன்மீக செல்வத்தையும் பெற முடியும். இந்து வேதங்களில், சமஸ்கிருத காவியங்களில், யாகத்தின் முக்கியத்துவம் பல இடங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு விருப்பமும் யாகம் செய்வது என்ற  நேர்மறையான வழியின் மூலம்  நிறைவேற்றப்படுகிறது. யாகம் வேதங்களில் சிறந்த கர்மாவாகும்.

இதனால்தான் இத்துணை சிறப்பு மிக்க யாகத்தை வீட்டிலோ, கோவிலிலோ அவரவர் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர்.வீட்டில் குழந்தைக்கு ஆயுள் யாகம் செய்வது முதல் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வு பெறவேண்டும் என்று கோவிலில் கூட்டாக செய்வது வரை இது போன்ற யாகங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவிலில் யாகம் நடத்துவது என்பது மிகச்சிறந்த செயலாகும். இதற்காக வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு யாகசாலை மண்டபம் இருந்தது. பழமையான செங்கல் கட்டிடத்தில் செயல்படாமல் இருந்த  இந்த யாகசாலை மண்டபம்  முழுமையாக அகற்றப்பட்டு தற்போது கருங்கல்லினால்  கம்பீரமான முறையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. பொலிவான தோற்றத்தில் அமைந்துள்ள இந்த புதிய மண்டபத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும், தட்சிணேஸ்வரர், தட்சிணேஸ்வரியாக இருந்து யாகம் நடத்துபவர்களுக்கு  அருளாசி புரியவிருக்கின்றனர். யாகம் நடத்துவது என்பது பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்ற கருத்தை மாற்றி எளியவர்களும் இங்கு யாகம் நடத்தலாம் என்பதற்கேற்ப கோவில் நிர்வாகம் பல திட்டங்களை வகுத்துள்ளது. பக்தர்கள் தாங்கள் நினைத்தது நடக்க, விரும்பிய பட்ஜெட்டில் இங்கு யாகம் நடத்தலாம் என்பது இங்குள்ள யாகசாலையின் சிறப்பாகும்.

எப்போதாவது யாகம் நடந்தது என்ற சொல் போய் இனி எப்போதும் இங்கு யாகம் நடக்கப் போகிறது, கோவிலுக்குள் மந்திர உச்சாடனைகள் கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறது என்பது உள்ளபடியே மனதிற்கு மனநிறைவு தரும் விஷயமாகும். இதே போல மூலவர் சன்னதிக்கு பிறகு பக்தர்கள் திரளாக நின்று தரிசனம் செய்வது உற்சவர் சன்னதியில்தான்.கும்பாபிஷேகத்திற்கு முன் உற்சவர் சன்னதி என்று எதுவும் இல்லை ஒரு பழைய மயில் வாகணத்தில் முருகன் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இப்போது உற்சவர் சன்னதிக்கென தனி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.முழுக்க முழுக்க கருங்கல்லால் தேர் வடிவில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கல் தேர் மண்டபத்தை இரண்டு யானைகள் சங்கிலி கட்டி இழுப்பது போல அமைந்திருப்பது இன்னும் சிறப்பாகும் இந்த கவின்மிகு கல்தேர் மண்டபத்தில் இருந்தபடி இனி உற்சவரான வடபழநியாண்டவர் அருளாசி வழங்கவிருக்கிறார்.

 
மேலும் வடபழனி கும்பாபிஷேகம் செய்திகள் »
temple news
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 48 நாட்கள் ... மேலும்
 
temple news
சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை வடபழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடந்தது.வடபழநி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ... மேலும்
 
temple news
சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar