குன்றத்தில் பறவை காவடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2022 03:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் பரவை காலடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தைப்பூசத்தன்று மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால் தைப்பூசம் அன்று வரை கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் காமு பூசாரி தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள், காவடிகள் எடுத்தும், ஆறு பக்தர்கள் பறவைக் காவடிகளிலும், ஏராளமான பக்தர்கள் முகத்தில் 20 அடி நீளமுள்ள வேல் குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் பாதயாத்திரையாக வந்து சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 7 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று காவடி பறவைக் காவடி, பால்குடம் எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு தடை உத்தரவால் தைப்பூசத்தன்று கோயில் சாத்தப்பட்டு இருந்ததால் இன்று (நேற்று) கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினோம். என பக்தர்கள் தெரிவித்தனர்.
வெள்ளி கவசம்: கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு நேற்று வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி பூஜைகள் நடந்தது.