திருப்பூர் : ”ஹிந்துக்கள் உரிமையை நிலைநாட்ட வார்டு வாரியாக கோவில் மீட்பு குழுக்கள் அமைக்கப்படும்” என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கோவில் நில மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில் ”தமிழக அரசு ஹிந்துக்களுக்கு பாதகமாக நடந்து கொள்கிறது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சதி நடந்து வருகிறது.”ஹிந்துக்கள் உரிமையை நிலைநாட்ட வார்டு வாரியாக கோவில் மீட்பு குழுக்கள் அமைக்கப்படும்” என்றார்.