பழநி: பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் கவுரவத் தலைவர் ஹரிஹர முத்து, தலைவர் ஜெயம் சரவணன், செயலாளர் கார்த்திகேயன், கவுரவ ஆலோசகர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.