முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் காந்திசிலை அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புபூஜை நடந்தது.விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதேபோன்று முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சுந்தர விநாயகர் கோயில், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள செல்வவிநாயகர் கோயில், வடக்கில் உள்ள பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.