பவழங்குடி சித்தர் ஜீவசமாதியில், சித்தர் 215வது ஆண்டு குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2022 07:01
திருக்கனுார் : திருக்கனூர் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழங்குடி சித்தர் ஜீவசமாதியில், சித்தர் 215வது ஆண்டு குரு பூஜை விழா வரும் 26ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, அன்று காலை 8:00 மணி முதல் கால யாக வேள்வியுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடக்கிறது.மதியம் 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பவழங்குடி சித்தர் திருத்தொண்டு சபையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.