பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வாராகி அம்மன் கோவிலில், பஞ்சமி திதி பூஜை நடை பெற்றது. பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர், வாராகி அம்மன் கோவிலில், தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.