பதிவு செய்த நாள்
24
ஜன
2022
17:24
கிணத்துக்கடவு: வடசித்துாரில், 800 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது.கிணத்துக்கடவு, வடசித்துாரில், 800 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நீண்ட நாட்கள் நடைபெறாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு சார்பில், கும்பாபிஷேகம் நடத்திட, தீர்மானிக்கப்பட்டது.தொடர்ந்து கோவில், கோபுர திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா துவங்கின. முதல் நிகழ்வாக, மாரியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை ஆகியன நடந்தன. நேற்று நான்காம் கால யாக வேள்வி பூஜையும், காலை, 7:00 - 9:00 மணிக்குள், கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நிறைவடைந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வினியோகிக்கப்பட்டது.