பழநி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 77 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 10:01
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 77 லட்சம் கிடைத்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.காணிக்கையாக 267 கிராம் தங்கமும், 11 ஆயிரத்து 251 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 1 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 மற்றும் 75 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், தேனி மாவட்ட உதவி ஆணையர் கலைவாணன், மதுரை மாவட்ட துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் (ஜன.25-), ஜன.27ம் தேதியும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.