சுவாமிதோப்பு வைகுண்டசுவாமி தலைமை பதியில் தை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 09:01
நாகர்கோவில்: சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் தை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 14–ம் தேதி இங்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் ஐயா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டாம் நாள் விழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அய்யா வைகுண்டசாமி முந்திரி கிணற்றின்கரையில் கலிவேட்டையாடினார். 11–ம் நாள் விழாவான நேற்று பகல் 12:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக 11:00 மணிக்கு அய்யா பல்லக்கில் வந்து தேரில் எழுந்தருளினார். முத்துக்குடை ஏந்தியவர்கள் முன் செல்ல, அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேர் இழுத்தனர். வடக்கு வாசலுக்கு வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம்,பூ போன்ற பொருட்களுடன் ‘சுருள்’ வைத்து வழிபட்டனர்.