பேரூர் பட்டீஸ்வரம் கோயிலின் பிரதான கோபுர வாசலில் தினமும் மாலையில் அபூர்வமான ஒரு சம்பிரதாயம் நடக்கிறது. கோபுர வாசலுக்கு வரும் தலைமை அர்ச்சகர், தீவட்டி ஒன்றினை எடுத்து, கோயில் கதவின் முன் சலாம் செய்வதுபோல் மேலும் கீழும் ஆட்டுகிறார். அதன்பிறகே கோயில் கதவு திறக்கப்படுகிறது. ஆலய ஊழியர்கள் வருமானமின்றி வாடிய காலத்தில் திப்பு சுல்தான் மானியங்கள் அளித்தாராம். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக ஏற்பட்ட பழக்கம் இது என்கிறார்கள்.