திருக்கோயில் தீர்த்தங்களில் பகலில் மட்டுமே நீராட வேண்டும் என்பது நியதி. இதற்கு விதிவிலக்காக, ஒப்பிலியப்பன் ஆலயத் திருக்குளத்தில் பகல், இரவு என எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். இதனால் இத் தீர்த்தத்தினை அகோ ராத்ர புஷ்கரணி என்றழைக்கின்றனர். தமிழில் பகலிராப் பொய்கை.