பதிவு செய்த நாள்
27
ஜன
2022
03:01
புதுச்சேரி: பெரம்பை கிராமத்தில், சாய்பாபா கோவில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகாவை சேர்ந்த பெரம்பை கிராமம், பங்களாமேட்டில் உள்ள சர்வ மங்கள சாய்பாபா கோவில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.விழாவில், அமைச்சர் சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், சீரடியை சேர்ந்த அச்சுதானந்தன் உள்ளிட்டோர் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.