பதிவு செய்த நாள்
29
ஜன
2022
07:01
ஆதம்பாக்கம்: நவசக்தி பாபா கோவில் ஜீர்ணோதாரன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சென்னை, ஆதம்பாக்கம், மேட்டுக்கழனி தெருவில், 2010ம் ஆண்டு நவசக்தி பாபா கோவில் நிர்மாணிக்கப்பட்டது. கோவில் கட்டி, 12 ஆண்டுகள் ஆன நிலையில், திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து, ஜீர்ணோதாரன அஷ்ட பந்தன மஹா கும்பாஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, 24ம் தேதி முதல் யாகசாலை வளர்த்து, கணபதி ஹோமம், லட்சுமி ஹோ மத்துடன் துவங்கியது.கும்ப பிஷேக நாளான நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடந்தது.காலை 9:45 மணிக்கு கோபுர கலசத்தில் கும்ப நீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சுவாமிநாத சிவாச்சாரியார், விக்னேஷ் சிவம்ஆகியோர் நடத்தி வைத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.