தை அமாவாசை: நித்திய கல்யாணப்பெருமாள் கடற்கரையில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2022 04:01
காரைக்கால்: காரைக்காலில் தை அமாவாசையொட்டி கடற்கரையில் நித்திய கல்யாணப்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் காலையில் ஏராளமானவர்கள் இறந்த முன்னோர்களுக்கு பிராத்தனை செய்தனர்.பின் அதைத்தொடர்ந்து கடற்கரையில் எழுந்தருளிய நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் உள்ளிட்ட சுவாமிகள் தீர்த்தவாரி நடந்தது.தீர்த்தவாரி முடிந்து நித்தியகல்யாண பெருமாள்,கைலாசநாதர் ஆகியோர் கடற்கரை சாலை,நேருவீதி,மாதாக்கோவில்,பாரதியார் சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இதுப்போல் தை அமாவாசை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.