திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள நல்லதங்காள் கோவில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் நல்லதங்காள் கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்றது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்களில் திருட்டு நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.