கேரளாவில் கோவில்களில் பூஜை செய்ய தயாராகி 22 பெண்கள் தீக்ஷா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2022 06:01
பாலக்காடு: கேரளாவில் தாந்திரிக மாந்திரிக சடங்குகள் படித்த 22 பெண்கள் பூஜை செய்ய தயாராகவுள்ளனர். குருவான சுபாஷ் தந்திரியில் இருந்து இவர்கள் தீக்ஷா ஏற்று கொண்டுள்ளனா். பயிற்சி பெற்ற
பெண்களுக்கும் கோவில்களில் பூஜை செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பூஜை விதிகள் அனைத்தும் படித்து பூஜை செய்ய தயாராக உள்ளனர் மாநிலத்தில் 22 பெண்கள். கேரள மாநிலம் மூவாற்றுப்புழை அருகே உள்ள பேரமங்கலம் நாகராஜா கோவிலில் வைத்து இவர்கள் குருவான சுபாஷ் தந்திரி இடமிருந்து பூஜை விதிகள் படித்து முடித்து "தீக்ஷ" ஏற்று கொண்டுள்ளனர்.
பயிற்சி பூர்த்தி செய்த 13 பெண்கள் கூட விரைவில் "தீக்ஷ" ஏற்றுக் கொள்வார்கள். மாறுபட்ட துறையைச் சேர்ந்த 62 ஆண்களும் "தீக்ஷ" ஏற்றுக் கொண்டுள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா வாஸ்து ஜோதிட ஆலயத்தை சேர்ந்த சுபாஷ் தந்திரி 2019 முதல் ஜோதிடம் மற்றும் தாந்திரிகத்தில் பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் இருந்து இதுவரை 140 பேர் பூஜை விதிகளும் 110 பேர் ஜோதிட கல்வியும் பூர்த்தி செய்துள்ளனர். இதுகுறித்து சுபாஷ் தந்திரி கூறுகையில்: ஜோதிடத்தை குறித்து பொதுமக்களிடமுள்ள தப்பான எண்ணத்தை மாற்றுவது தன் முதல் நோக்கம். பெண்களில் அதிகவும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் பூஜை செய்யக்கூடாது என்று எங்குமே கூறியதில்லை. கடவுள் நம்பிக்கை உள்ள யாருக்கும் பூஜை செய்யலாம். ஜோதிடம் கற்க குறைந்தது ஏழு ஆண்டும் பூஜை விதிகள் கற்க இரண்டு ஆண்டும் தேவை. கடுமையான கண்காணிப்பிலும் முறையிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
பயிற்சியின் இறுதி கட்டத்தில் பேரமங்கலம் நாகராஜா கோவிலில் நடைமுறை வகுப்புகளும் இருக்கும். பயிற்சி பூர்த்தி செய்த பெண் பூஜாரிகள் முதலில் கணபதி ஹோமவும் பகவத் ஹோமவும் செய்வார்கள். வீடுகளில் உள்ள பூஜைகள் பெண் பூஜாரிகளிடம் அளிக்க மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் முன் வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் பூஜை விதிகளை மிகசிறந்த முறையில் பெண்கள் கற்கின்றனர். பூஜை கற்க்க வருவோரில் அதிகமும் உயர்ந்த கல்வி தகுதியுள்ள பெண்களாகும். இவ்வாறு சுபாஷ் சந்திரி தெரிவித்தார். பூஜை விதிகள் படித்து முடித்த கணித முதுகலைப் பட்டதாரியான அஞ்சு சரத் கூறுகையில்: செய்யும் பூஜைக்கு பலன் கிடைக்கும் என்பதில் முழு மன நம்பிக்கை உள்ளனர். சுபாஷ் தந்திரியின் மேற்பார்வையில் பேரமங்கலம் நாகராஜா கோவிலில் பயிற்சி பெற்றவர்கள் மாறுபட்ட துறையை சேர்ந்தவர்களாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.