திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுக்கு முன் அதிக அளவில் இருந்தது. தினமும் சராசரியாக, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். ஆனால் கொரோனா பரவலுக்குப் பின் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்குள்ளாக குறைந்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால், தேவஸ்தான நிர்வாகம் தற்போது விரைவு தரிசனம், சர்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 28 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு வந்திருந்தனர்.