பதிவு செய்த நாள்
01
பிப்
2022
11:02
மேட்டுப்பாளையம்: தை அமாவாசையை முன்னிட்டு வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிபட்டனர்.
கொரோனா நோய் தொற்றால் கோவில்கள் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பின்பு வழிகாட்டு நெறி முறைப்படி, திங்களில் இருந்து வியாழன் வரை மட்டுமே, கோவில்கள் திறந்து, பக்தர்கள் வழிபட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். முக்கியமான விழா நாட்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், வழிபாட்டு ஸ்தலங்களில், வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில்களில் முக்கியமான விழாக்கள் நடத்த முடியாமல் தடைப்பட்டன. இந்நிலையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிற்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள் கோவில் கொடிமரம் முன்பு, எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.