அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் தை அமாவாசையான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில், பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து எலுமிச்சை கனி மாலை அணிவிக்கப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே வளாகத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஓதிமலை ரோட்டில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான பெரிய அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் ரோடு சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது.