இரண்டுமே சரி தான். நமசிவாய என்பது எல்லோருக்கும் பொது. சிவாயநம என்பது தீட்சை பெற்று சிவபூஜை செய்பவர்களுக்கு மாத்திரம் உரியது. நமசிவாய என்பது தான் முதன்முதலில் சமயதீட்சை பெறுபவர்களுக்கு உபதேசிக்கப்படுவதாகும். இதை ஜெபித்தாலே, இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் சவுபாக்யங்கள் அனைத்தும் கிட்டிவிடும்.