பதிவு செய்த நாள்
03
பிப்
2022
06:02
புதுச்சேரி : குருமாம்பட்டு புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.புதுச்சேரி, குருமாம்பட்டில் உள்ள புற்று மாரியம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவிலை புனரமைத்து, ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
அதனையொட்டி, வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதற்கான பூர்வாங்க பூஜை இன்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கணபதி ஹோமங்களுடன் துவங்குகிறது.தொடர்ந்து நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.நாளை காலை கோ பூஜை, மகாலட்சுமி பூஜை, அஸ்த்ர ஹோமம், கோபுர கலசம் மற்றும் நுாதன விக்ரக கரிகோலம், தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை விநாயகர் பூஜை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் முடிந்து, முதல் கால யாக பூஜை துவங்குகிறது.5ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடக்கிறது.காலை 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவில் கோபுரம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, 9:15 மணிக்கு மேல் புற்றுமாரியம்ன் கோவில் ராஜகோபுரம் மற்றும் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.