சக்தி பால நரமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2022 03:02
சிதம்பரம்: சிதம்பரம் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பால நரமுக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது.
சிதம்பரம் தெற்கு வீதியில் அமைந்துள்ள பழையான கோவில் ஸ்ரீசக்தி பாலநரமுக விநாயகர் கோவில். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கோவில் திருப்பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து வரும் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 2 ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து பூர்ணாஹுதி, மகா தீபாரதனை நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 5 ம் தேதி 4 ம் கால யாகசாலை பூஜையும், மதியம் 3 மணிக்கு 5 ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நாளான 6 ம் தேதி காலை கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கடயாத்ரா தானம் ஆகியன நடைபெற்று, தொடர்ந்து 7.15 க்கும் மேல் 8.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பணிகளை பட்டு தீட்சிதர் செய்து வருகிறார்.