புதுச்சேரி : குருமாம்பட்டு புற்று மாரியம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று மாலை யாகசாலை பூஜை துவங்கியது.
குருமாம்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள புற்று மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி, நாளை 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 3ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை கோ பூஜை மற்றும் மகாலட்சுமி உள்ளிட்ட ேஹாமங்கள் நடைபெற்றது.மாலை மங்கள இசை விநாயகர் பூஜை, அங்குராப்பணம், ஆச்சார்ய ரக்ஷ பந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணத்தை தொடர்ந்து யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை துவங்கியது.
தொடர்ந்து ஷண்ணவதி ேஹாமம், மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 6ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்படாகி, காலை 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவில் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9:15 மணிக்கு மேல் புற்று மாரியம்மன் கோவில் ராஜகோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.