பதிவு செய்த நாள்
05
பிப்
2022
11:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதர் வயிரவ சுவாமி கோயிலுக்கு நாளை கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
இக்கோயிலுக்கு நகரத்தாரால் கடந்த 1894 ல் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்தது. முன்னர் 6 முறை கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த 2008 ல் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்.1ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் யாகசாலை பூஜைகளை செய்கின்றனர். தொடர்ந்து நேற்று வரை மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்துள்ளன. இன்று காலை 8:30 மணிக்கு 4ம் கால யாகபூஜை, காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு 5ம் கால யாகபூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாரதனைகளும் நடைபெறும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு 6 ம் கால யாகபூஜை, காலை 6:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8.00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4.15 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள், வயிரவ சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஏற்பாட்டினை ஏழகப்பெருந் திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.