காரைக்கால்: தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சனீஸ்வர பகவான் கோவிலில் தை சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகம் காணப்பட்டு வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.இதனால் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்ஸ்வர் கோவிலில் தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் சனிக்கிழமை தோறும் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வரும் நிலையில் தற்சமயம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாரம் தமிழகம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் இல்லாத வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தை சனியை முன்னிட்டு சனிஸ்வரபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு நலன்கருதி எஸ்.பி.,சுப்ரமணியன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லெனில்பாரதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.