பதிவு செய்த நாள்
06
பிப்
2022
03:02
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா, வரும் 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மதுரை, மேலமாசி வீதியில் இம்மையிலும் நன்மைதருவார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் பிப்.,8 காலை 6.45 மணி முதல், 7.00 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவில் 15ம் தேதி திருக்கல்யாணமும், 16ம் தேதி திருத்தேர் உற்சவமும், 17 ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான இன்று மாலை சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர். பிப்.,18ம் தேதி பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.