கும்பகோணத்தில் விவேகானந்தர் எழுச்சி உரை ஆற்றிய தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2022 03:02
கும்பகோணம்: 125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் எழுச்சி உரை ஆற்றிய தினம், பிப்ரவரி 5, மாலை 5 மணி. தேர்தல் விதிமுறைகளின் படி, இந்தத் தினத்தில் கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தரின் சிலை வைப்பது சற்று காலம் தள்ளி நடக்க உள்ளது. டவுன் ஹாலில் அந்தத் தினத்தில் அதே நேரத்தில் எளிமையாக ஒரு விழா ஏற்பாடு ஆனது. சுமார் 600 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கு முன்பு முரளி கபே வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் திரு உருவ சிலை நிறுவப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.