நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயப் பிரதிஷ்சம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2022 03:02
காரைக்கால்: காரைக்காலில் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயப் பிரதிஷ்டைத்தை முன்னிட்டு மகா ஹோமம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் பெருமாளை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.இக்கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு முன்னிட்டு பாலாலயப் பிரதிஷ்த்தை முன்னிட்டு 5ம் தேதி பகவத் பிரார்த்தனை புண்யாகவாசனம்,திவ்யப்பிரபந்த சேவை,விமான கலாகர்ஷனம் ஹோமங்கள்,பூர்ணாஹீதி சாற்றுமறை நடந்தது.நேற்று அதிகாலை புண்யாகவாசனம் ஹோமம் மற்றும் பாலாலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் பட்டாச்சியார் புனிதநீரை கோவிலை சுற்றி வளம் வந்து அபிேஷாகம் மற்றும் ஆதராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் வாரியம்,திருப்பணிக்குழு மற்றும் நிதியகல்யாணப்பெருமாள் பக்தஜன ஸ்பா ஆகியோர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.