பதிவு செய்த நாள்
06
பிப்
2022
03:02
ஹைதராபாத்-இறைபக்தி வழியாக, மக்களிடம் சமத்துவத்தை ஏற்படுத்தியவர் ராமானுஜர். அவரது பணியில் தமிழுக்கு அதிக பங்கு உள்ளது.அவருக்கு நெருங்கிய தொடர்புடைய கோவில்களில் இப்போதும், தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. பண்பாடுதலைநகர் ஹைதராபாதின் புறநகர் பகுதியில், 1,000 கோடி ரூபாய் செலவில், ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:உலகின் மிக பழமையான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. எந்த விஷயங்களை நாம் ஏற்க வேண்டும் என்பதை கூறியவர்கள்,
ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்கள். அவர்களை போன்ற குருவின் வாயிலாகத் தான், நாம் அறிவை பெறுகிறோம். குருவை தெய்வமாக வழிபடுவது, நம் பண்பாடு. ராமானுஜரின் சிந்தனை மிகவும் உன்னதமானது. அவர், பல விஷயங்களை எளிமையாக, ஒரே நுாலில் தெரிவித்து உள்ளார். தமிழுக்கு பங்குதமிழில் பல முக்கிய படைப்புகளை ராமானுஜர்அருளி இருக்கிறார். அவர் சமஸ்கிருதத்திலும் உரைகள் எழுதியுள்ளார். ராமானுஜரின் பணியில், தமிழுக்கு முக்கிய இடம் உண்டு. அவர் தொடர்புடைய ஆலயங்களில் இப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர்
ராமானுஜர். மனிதர்களிடம் சமத்துவத்தை கடைப்பிடித்தவர். அவர் தமிழகத்தில் பிறந்திருந்தாலும், அவரது சிந்தனைகள், போதனைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. ராமானுஜரின் சமத்துவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர். ராமானுஜரின் இந்த உருவச்சிலை, மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும். வருங்கால சந்ததியினரிடம் சமத்துவத்தை ஏற்படுத்தும். வசந்த பஞ்சமி தினத்தில், ராமானுஜர் சிலை திறப்பு விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானது. ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை நாம் பின்பற்றுவோம். இந்த சிலை, இந்தியாவின் பெருமையை, வருங்கால தலைமுறைக்கு கூறும்.உலகம் முழுதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு, என் வணக்கங்கள். 108 திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்துள்ளது.
ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது, என் பாக்கியம். இங்கு நடந்த, லட்சுமிநாராயண யாகத்தின் பலன், அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.பிரதமரை வரவேற்காமல்புறக்கணித்த முதல்வர்ராமானுஜரின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாதுக்கு நேற்று வந்தார்.பிரதமரை வரவேற்க முதல்வர் சந்திரசேகர ராவ், விமான நிலையத்துக்கு வரவில்லை. மாநில கவர்னர் தமிழிசை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர் தலசானி சீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.முதல்வர் சந்திரசேகர ராவ், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமரை வரவேற்க அவர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் தலசானி சீனிவாஸ் யாதவ், மோடியை வரவேற்றார் என, தெலுங்கானா அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இது பற்றி தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் குமார் கூறியதாவது:முதல்வர், பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து, மாநிலத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை, முதல்வர் அடிக்கடி அவமதித்து வருகிறார்.
சந்திரசேகர ராவ் அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது வெட்கக்கேடானது.இவ்வாறு அவர் கூறினார்.இயற்கை விவசாயத்தைஅதிகரிக்க நடவடிக்கை ஹைதராபாதில் உள்ள ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி., எனப்படும் வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டில் பசுமை பகுதிகளை அதிகரிக்க, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை விவசாயமே நாட்டின் எதிர்காலமாக இருக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். ராமானுஜர் சிலை: முக்கிய அம்சங்கள்l தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் பிறந்தார் வைணவ துறவி ஸ்ரீ ராமானுஜாச்சாரி l 11, 12ம் நுாற்றாண்டில் நாடு முழுதும் பயணித்து சமத்துவம், சமூக நீதியை போதித்தார்l ஹைதராபாத் விமானம் நிலையத்திலிருந்து 12 கி.மீ., துாரத்தில் முச்சிந்தல் கிராமத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது
l வடிவமைத்தவர் ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிl 2014ல் அடிக்கல் நாட்டப்பட்டது l நன்கொடை வாயிலாக வந்த 1,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதுl பரப்பளவு 40 ஏக்கர்l தரைதளம் 63,444 சதுர அடி. முதல் தளம் 3 லட்சம் சதுர அடி, இரண்டாவது தளம் 14,700 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது
l தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, துத்தநாகம் என பஞ்சலோக கலவையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுl 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, தாமரை பீடத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது
l பீடத்தின் அடிப்பகுதியை யானைகள் தாங்கி பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்மேல், 2 அடுக்குகளில் 54 தாமரை இதழ்கள் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளனl தாமரை அடுக்குகளுக்கு இடையே, 18 சங்கு, 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன
l பத்ர வேதி எனப்படும் 54 அடி உயர மேடையில்இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் டிஜிட்டல் நுாலகம், ஆராய்ச்சி மையம், பண்டைய இந்திய நுால்கள், ஒரு தியேட்டர், ஸ்ரீராமானுஜாச்சாரியாரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன
l ராமானுஜர் 120 வயது வரை வாழ்ந்ததை குறிப்பிடும் விதமாக 120 கிலோ எடை தங்கத்திலான வழிபாட்டு சிலையும் வைக்கப்பட்டுள்ளது l மதம், ஜாதி, இனம் என எந்த பாகுபாடுமின்றி, மக்களின் உயர்வுக்காக பாடுபட்ட ராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறதுl இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச கோவில்களின் மாதிரி கோவில்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன
l இது, அமர்ந்த நிலையில் இருக்கும் உலகின் இரண்டாவது உயரமான சிலை. தாய்லாந்தின் புத்தர் சிலை -- 301 அடி - முதலிடத்தில் உள்ளது
l குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலைக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது மிக உயரமான சிலையாக, இந்த ராமானுஜரின் சிலை உள்ளது.