குமரியில் இருந்து திருச்செந்துாருக்கு நுாற்றுக்கணக்கில் காவடி பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2022 04:02
நாகர்கோவில் : திருச்சந்துாரில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டு சென்றது. திருசெந்துாரில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் நாள் விழா குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் காவடிகளால் சிறப்பிக்கப்படுகிறது. இதற்காக நேற்று ராஜாக்கமங்கலம், குளச்சல், திங்கள்சந்தை, தலக்குளம், லெட்சுமிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர் காவடி, பறக்கும் காவடி, வேல் காவடி, அக்னி காவடி, சர்ப்ப காவடி என நுாற்றுக்கணக்கான காவடிகள் புறப்பட்டு சென்றது. இதனால் பரசேரி முதல் குளச்சல் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்த காவடிகள் அனைத்தும் நாளை மறுநாள் திருச்செந்துார் சென்றடையும். காவடியில் கொண்டு செல்லப்படும் கலச நீர் முருகனுக்கு அபிேஷகம் செய்யப்படும்.