ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மகா வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2022 02:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக உற்ஸவம், மகா சாந்தி ஹோமத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு ரகுராம பட்டர் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். இன்று காலை 108 கலச திருமஞ்சனம், நாளை (பிப்ரவரி 10) ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.