பழநி: பழநி முருகன் வைஸ்ய பஜனா மண்டலி, புஷ்ப கைங்கர்யா சபா இணைந்து, வருகின்ற ஜூலை 20ல், திருப்பதி சீனிவாசா திருக்கல்யாணம் நடத்துகின்றனர். திருமலை திருப்பதி சீனிவாசா, அலமேலு மங்கை தாயார், பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் ஜூலை 20ல் வெள்ளி மாலை 6 மணிக்கு பழநி அக்ஷயா அகாடமி பள்ளியில் நடக்கிறது. முன்னதாக அடிவாரம் அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் காலை 6 மணிக்கு சுப்ரபாதம், தோமாலை, புஷ்பாஞ்சலியும், காலை 9 மணி நகர சங்கீர்த்தனம், மாலை 4 மணி சுவாமி புறப்பாடு நடைபெறும். அனுமதி இலவசம்.