பதிவு செய்த நாள்
12
ஜூலை
2012
10:07
புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 31ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை, வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி, சின்னசுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏகதின லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு லட்சார்ச்சனை, வரும் 5ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. லட்சார்ச்சனையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 10 மணி வரையும், 10 முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும், 4 மணி முதல் 6 மணி வரையும், 6 முதல் 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில் ரூ.250 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். லட்சார்ச்சனை ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், பாலசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.