கரூர்: கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருக்கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக தின விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பிரசித்தி பெற்ற கரூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் மஹா கும்பாபிஷேக தினவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு ஸ்ரீ லட்சுமி நாராயண அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு கலச பூஜை, எட்டு மணிக்கு சங்குஸ்தாபனம் மற்றும் சங்கு பூஜை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மஹா தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.