மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி முகூர்த்தக்கால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2022 03:02
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., மீட்டர் தூரம் மஞ்சளாற்றின் நதிக்கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஹிந்து அறநிலையத்துறைக்குசொந்தமான இக் கோயில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த பழமையான கோவில். இங்கு அம்மனுக்கு விக்கிரஹம் கிடையாது. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. மஞ்சளாற்றில் குளித்துவிட்டு காமாட்சி அம்மனை பக்தர்கள் வணங்குகின்றனர். மாலை 6:00 மணிக்கு உறுமி,சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம். மாசி மகா சிவராத்திரி திருவிழா: தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது. மார்ச் 1 மகா சிவராத்திரி முதல் முதல் மார்ச் 8 வரை திருவிழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வைரவன்,பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் தனராஜ்பாண்டியான், கனகராஜ் பாண்டியன் செய்து வருகின்றனர்.