ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2022 10:02
நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நேற்று அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மதுரை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கரமனையில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், முதியவர் ஒருவர் கனவில் வந்து தனக்கு கோயில் எழுப்ப கூறியதின் அடிப்படையில் கட்டப்பட்ட கோயில் இன்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கில்பெண்கள் கலந்து கொள்வர். இரண்டு முறை இது கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு திருவிழா நேற்று அம்மனை காப்பு கட்டி குடியிருத்திய நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான 17-ம் தேதி காலை 10.50 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 200 பேர் மட்டுமே கோயில் வளாகத்தில் பொங்கல் போட அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் பக்தர்கள் கடந்த ஆண்டு போல வீடுகளில் இருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட வேணடும் என்றும், கோயில் வளாகத்தில் கோயில் சார்பில் ஒரு அடுப்பில் மட்டும் பொங்கலிடப்படும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.