பதிவு செய்த நாள்
11
பிப்
2022
01:02
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேர்த்திருவிழா, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி வரும் 14ல் முகூர்த்த கால்நட்டு துவங்கியது.முக்கிய நிகழ்வான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, மார்ச் 2ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு வரும் 14ம் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா நடக்கிறது. இதையடுத்து, வரும் 21ம் தேதி கிராம சாந்தி, 22ம் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு அக்னி சாட்டு, 23ம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24ம் தேதி கிளி வாகனம், 25-ம் தேதி சிம்ம வாகனம், 26ம் தேதி அன்ன வாகனம், 27ம் தேதி காமதேனு வாகனத்தில் வீதி உலா, 28ம் தேதி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 1ம் தேதி திருக்கல்யாணம், முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி பரிவேட்டை, மார்ச் 4ம் தேதி தெப்ப உற்சவம், மார்ச் 5ம் தேதி தீத்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 7ம் தேதி நடக்கும் வசந்த விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் செய்துள்ளனர்.