* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். மனதிலுள்ள பொறாமை நீங்கும். * பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். * தீயவர்களுடன் சேராதீர். மீறி சேர்ந்தால் அவர்கள் செய்த பாவம் உங்களை சேரும். * நண்பர்களிடம் உண்மையாக இருங்கள். இறைவனின் பார்வை உங்கள் மீது விழும். * ஒருவரை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவரது நண்பரை அறிந்து கொள்ளுங்கள். * நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர். * ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவனின் அன்புக்கு உரியவர். * ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல். * பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.