மாசிமகம் நட்சத்திரம் அதிகாலை 3:30 – 4:30 மணிக்குள் இருக்குமானால் அது சிறப்பானதாகும். இந்த நேரத்தில் பெண்கள் கருத்தரித்தால் பிறக்கும் குழந்தை யோகமுடையதாகவும், நல்ல குணவானாகவும் இருக்கும். இதை மனதில் கொண்டு தான் ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பர். ‘மக’ என்ற சொல்லுக்கு, ‘இளமை’, ‘குழந்தை’, ‘மக நட்சத்திரம், ‘இன்பம்’ என பல பொருள்கள் உண்டு. பொதுவாக அதிகாலைப் பொழுதில் முதல் கர்ப்பம் தரிக்குமானால் அது நல்ல விஷயம் தான். அதிலும் மாசி மகமாக இருந்தால் இன்னும் சிறப்பு.