கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி கால பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பெண்கள் தேங்காய் உடைத்து அதில் தீபம் ஏற்றி வழிபட்டனர். கால பைரவருக்கு உகந்த மந்திரங்கள் வாசிக்கப்பட்டு பூஜைகள் செய்தனர்.