காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏகதின லெட்ச்சார்சனை விழா நடந்தது.
காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தினம் காளியம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வருகின்றனர்.செவ்வாய்,வெள்ளி மக்கள் கூட்டம் அதிகம் கணப்படும்.செவ்வாய்கிழமை இரவு பக்தர்கள் தங்கள் நேற்றி கடனை நிறைவேற்ற பக்தர்கள் கோவிலில் தங்கி வழிப்பாடு செய்வது வழக்கம்.இந்நிலையில் தைகடை வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லெட்ச்சார்சனை விழாவில் பெண்கள் தங்களுடைய குடும்பம் நன்மையாக இருக்கவேண்டும் என்று ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.மேலும் நோய் தொற்று காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியூடன் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ.,மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.